
96. குடிமை
| 1 இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு |
| பொருள்(விளக்கம்): நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது |
| Transliteration: Irpirandhaar Kanalladhu Illai IyalpaakachCheppamum Naanum Orungu |
| Couplet: Save in the scions of a noble house, you never find Instinctive sense of right and virtuous shame combined |
| Explanation: Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 951 |
| 2 ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் |
| பொருள்(விளக்கம்): ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள் |
| Transliteration: Ozhukkamum Vaaimaiyum Naanum Im MoondrumIzhukkaar Kutippiran Thaar |
| Couplet: In these three things the men of noble birth fail not: In virtuous deed and truthful word, and chastened thought |
| Explanation: The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 952 |
| 3 நகையீகை அன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு |
| பொருள்(விளக்கம்): முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும் |
| Transliteration: Nakaieekai Insol Ikazhaamai NaankumVakaiyenpa Vaaimaik Kutikku |
| Couplet: The smile, the gift, the pleasant word, unfailing courtesy These are the signs, they say, of true nobility |
| Explanation: A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 953 |
| 4 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் |
| பொருள்(விளக்கம்): பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள் |
| Transliteration: Atukkiya Koti Perinum KutippirandhaarKundruva Seydhal Ilar |
| Couplet: Millions on millions piled would never win The men of noble race to soul-degrading sin |
| Explanation: Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 954 |
| 5 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று |
| பொருள்(விளக்கம்): பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள் |
| Transliteration: Vazhanguva Thulveezhndhak Kannum PazhangutiPanpil Thalaippiridhal Indru |
| Couplet: Though stores for charity should fail within, the ancient race Will never lose its old ancestral grace |
| Explanation: Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 955 |
| 6 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார் |
| பொருள்(விளக்கம்): மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள் |
| Transliteration: Salampatrich Chaalpila Seyyaarmaa SatraKulampatri Vaazhdhum En Paar |
| Couplet: Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame |
| Explanation: Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 956 |
| 7 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து |
| பொருள்(விளக்கம்): பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும் |
| Transliteration: Kutippirandhaar Kanvilangum Kutram VisumpinMadhikkan Maruppol Uyarndhu |
| Couplet: The faults of men of noble race are seen by every eye, As spots on her bright orb that walks sublime the evening sky |
| Explanation: As spots on her bright orb that walks sublime the evening sky |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 957 |
| 8 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும் |
| பொருள்(விளக்கம்): என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும் |
| Transliteration: Nalaththinkan Naarinmai Thondrin AvanaikKulaththinkan Aiyap Patum |
| Couplet: If lack of love appear in those who bear some goodly name, 'Twill make men doubt the ancestry they claim |
| Explanation: If one of a good family betrays want of affection, his descent from it will be called in question |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 958 |
| 9 நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல் |
| பொருள்(விளக்கம்): விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம் |
| Transliteration: Nilaththil Kitandhamai Kaalkaattum KaattumKulaththil Pirandhaarvaaich Chol |
| Couplet: Of soil the plants that spring thereout will show the worth: The words they speak declare the men of noble birth |
| Explanation: As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 959 |
| 10 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு |
| பொருள்(விளக்கம்): தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும் |
| Transliteration: Nalamventin Naanutaimai Ventum Kulam VentinVentuka Yaarkkum Panivu |
| Couplet: Who seek for good the grace of virtuous shame must know; Who seek for noble name to all must reverence show |
| Explanation: He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 96 - குடிமை, குறள் : 960 |