srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

34. நிலையாமை

1  நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
பொருள்(விளக்கம்): நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்
Transliteration: Nillaadha Vatrai Nilaiyina EndrunarumPullari Vaanmai Katai
Couplet: Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure
Explanation: That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 331
2  கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று
பொருள்(விளக்கம்): சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்
Transliteration: Kooththaattu Avaik Kuzhaath Thatre PerunjelvamPokkum Adhuvilin Thatru
Couplet: As crowds round dancers fill the hall, is wealth's increase;
Its loss, as throngs dispersing, when the dances cease
Explanation: The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 332
3  அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
பொருள்(விளக்கம்): நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்
Transliteration: Arkaa Iyalpitruch Chelvam AdhupetraalArkupa Aange Seyal
Couplet: Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ
Explanation: Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 333
4  நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்
பொருள்(விளக்கம்): வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்
Transliteration: Naalena Ondrupor Kaatti Uyir EerumVaaladhu Unarvaarp Perin
Couplet: As 'day' it vaunts itself; well understood, 'tis knife',
That daily cuts away a portion from thy life
Explanation: Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 334
5  நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்
பொருள்(விளக்கம்): வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்
Transliteration: Naachchetru Vikkulmel Vaaraamun NalvinaiMersendru Seyyap Patum
Couplet: Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death
Explanation: Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 335
6  நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு
பொருள்(விளக்கம்): இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்
Transliteration: Nerunal Ulanoruvan Indrillai EnnumPerumai Utaiththuiv Vulaku
Couplet: Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world
Explanation: This world possesses the greatness that one who yesterday was is not today
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 336
7  ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல
பொருள்(விளக்கம்): ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்
Transliteration: Orupozhudhum Vaazhvadhu Ariyaar KarudhupaKotiyum Alla Pala
Couplet: Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away
Explanation: Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 337
8  குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு
பொருள்(விளக்கம்): உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்
Transliteration: Kutampai Thaniththu Ozhiyap Pulparan ThatreUtampotu Uyiritai Natpu
Couplet: Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share
Explanation: The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 338
9  உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
பொருள்(விளக்கம்): நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு
Transliteration: Urangu Vadhupolunj Chaakkaatu UrangiVizhippadhu Polum Pirappu
Couplet: Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep
Explanation: Death is like sleep; birth is like awaking from it
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 339
10  புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு
பொருள்(விளக்கம்): உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது
Transliteration: Pukkil Amaindhindru Kollo UtampinulThuchchil Irundha Uyirkku
Couplet: The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows
Explanation: It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 34 - நிலையாமை, குறள் : 340
Page 34 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com