srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

55. செங்கோன்மை

1  ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
பொருள்(விளக்கம்): குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்
Transliteration: Orndhukan Notaadhu Iraipurindhu YaarmaattumTherndhusey Vaqdhe Murai
Couplet: Search out, to no one favour show; with heart that justice loves
Consult, then act; this is the rule that right approves
Explanation: To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on,
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 541
2  வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
பொருள்(விளக்கம்): உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது
Transliteration: Vaanokki Vaazhum Ulakellaam MannavanKol Nokki Vaazhung Kuti
Couplet: All earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to king that ruleth all
Explanation: When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 542
3  அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
பொருள்(விளக்கம்): ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்
Transliteration: Andhanar Noorkum Araththirkum AadhiyaaiNindradhu Mannavan Kol
Couplet: Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king
Explanation: The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 543
4  குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
பொருள்(விளக்கம்): குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்
Transliteration: Kutidhazheeik Kolochchum Maanila MannanAtidhazheei Nirkum Ulaku
Couplet: Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands
Explanation: The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 544
5  இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு
பொருள்(விளக்கம்): நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்
Transliteration: Iyalpulik Kolochchum Mannavan NaattaPeyalum Vilaiyulum Thokku
Couplet: Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields
Explanation: Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 545
6  வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
பொருள்(விளக்கம்): ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்
Transliteration: Velandru Vendri Tharuvadhu MannavanKoladhooung Kotaa Thenin
Couplet: Not lance gives kings the victory,
But sceptre swayed with equity
Explanation: It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 546
7  இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
பொருள்(விளக்கம்): நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்
Transliteration: Iraikaakkum Vaiyakam Ellaam AvanaiMuraikaakkum Muttaach Cheyin
Couplet: The king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects
Explanation: The king defends the whole world; and justice, when administered without defect, defends the king
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 547
8  எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்
பொருள்(விளக்கம்): ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்
Transliteration: Enpadhaththaan Oraa Muraiseyyaa MannavanThanpadhaththaan Thaane Ketum
Couplet: Hard of access, nought searching out, with partial hand
The king who rules, shall sink and perish from the land
Explanation: The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 548
9  குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
பொருள்(விளக்கம்): குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்
Transliteration: Kutipurang Kaaththompik Kutram KatidhalVatuvandru Vendhan Thozhil
Couplet: Abroad to guard, at home to punish, brings
No just reproach; 'tis work assigned to kings
Explanation: 68 In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 549
10  கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
பொருள்(விளக்கம்): கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்
Transliteration: Kolaiyir Kotiyaarai Vendhoruththal PaingoozhKalaikat Tadhanotu Ner
Couplet: By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain
Explanation: For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn
பால் : பொருட்பால், அதிகாரம் : 55 - செங்கோன்மை, குறள் : 550
Page 55 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com