srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

13. அடக்கமுடைமை

1  அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
பொருள்(விளக்கம்): அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்
Transliteration: Atakkam Amararul Uykkum AtangaamaiAarirul Uyththu Vitum
Couplet: Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there
Explanation: Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 121
2  காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு
பொருள்(விளக்கம்): மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை
Transliteration: Kaakka Porulaa Atakkaththai AakkamAdhaninooung Killai Uyirkku
Couplet: Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul
Explanation: Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 122
3  செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்
பொருள்(விளக்கம்): அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்
Transliteration: Serivarindhu Seermai Payakkum ArivarindhuAatrin Atangap Perin
Couplet: If versed in wisdom's lore by virtue's law you self restrain
Your self-repression known will yield you glory's gain
Explanation: Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 123
4  நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
பொருள்(விளக்கம்): உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்
Transliteration: Nilaiyin Thiriyaadhu Atangiyaan ThotramMalaiyinum Maanap Peridhu
Couplet: In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view
Explanation: More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 124
5  எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
பொருள்(விளக்கம்): பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்
Transliteration: Ellaarkkum Nandraam Panidhal AvarullumSelvarkke Selvam Thakaiththu
Couplet: To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem
Explanation: Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 125
6  ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
பொருள்(விளக்கம்): உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்
Transliteration: Orumaiyul Aamaipol Aindhatakkal AatrinEzhumaiyum Emaap Putaiththu
Couplet: Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains
Explanation: 1 7 Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 126
7  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
பொருள்(விளக்கம்): ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்
Transliteration: Yaakaavaa Raayinum Naakaakka KaavaakkaalSokaappar Sollizhukkup Pattu
Couplet: Whate'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep
Explanation: Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 127
8  ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
பொருள்(விளக்கம்): ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்
Transliteration: Ondraanun Theechchol Porutpayan UntaayinNandraakaa Thaaki Vitum
Couplet: Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing
Explanation: If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 128
9  தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
பொருள்(விளக்கம்): நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது
Transliteration: Theeyinaar Suttapun Ullaarum AaraadheNaavinaar Sutta Vatu
Couplet: In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more
Explanation: The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 129
10  கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
பொருள்(விளக்கம்): கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்
Transliteration: Kadhangaaththuk Katratangal Aatruvaan SevviArampaarkkum Aatrin Nuzhaindhu
Couplet: Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path
Explanation: Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 13 - அடக்கமுடைமை, குறள் : 130
Page 13 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com