srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

73. அவையஞ்சாமை

1  வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
பொருள்(விளக்கம்): சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்
Transliteration: Vakaiyarindhu Vallavai Vaaisoraar SollinThokaiyarindha Thooimai Yavar
Couplet: Men, pure in heart, who know of words the varied force,
The mighty council's moods discern, nor fail in their discourse
Explanation: The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 721
2  கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
பொருள்(விளக்கம்): கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்
Transliteration: Katraarul Katraar Enappatuvar KatraarmunKatra Selachchollu Vaar
Couplet: Who what they've learned, in penetrating words heve learned to say,
Before the learn'd among the learn'd most learn'd are they
Explanation: Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 722
3  பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்
பொருள்(விளக்கம்): அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்
Transliteration: Pakaiyakaththuch Chaavaar Eliyar AriyarAvaiyakaththu Anjaa Thavar
Couplet: Many encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found
Explanation: Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned)
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 723
4  கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
பொருள்(விளக்கம்): அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
Transliteration: Katraarmun Katra Selachchollith ThaamkatraMikkaarul Mikka Kolal
Couplet: What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more
Explanation: (Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning)
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 724
5  ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு
பொருள்(விளக்கம்): அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்
Transliteration: Aatrin Alavarindhu Karka AvaiyanjaaMaatrang Kotuththar Poruttu
Couplet: By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply
Explanation: In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar)
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 725
6  வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
பொருள்(விளக்கம்): கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை
Transliteration: Vaaloten Vankannar Allaarkku NoolotenNunnavai Anju Pavarkku
Couplet: To those who lack the hero's eye what can the sword avail
Or science what, to those before the council keen who quail
Explanation: What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 726
7  பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்
பொருள்(விளக்கம்): அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்
Transliteration: Pakaiyakaththup Petikai Olvaal AvaiyakaththuAnju Mavankatra Nool
Couplet: As shining sword before the foe which 'sexless being' bears,
Is science learned by him the council's face who fears
Explanation: The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 727
8  பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
பொருள்(விளக்கம்): அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை
Transliteration: Pallavai Katrum Payamilare NallavaiyulNanku Selachchollaa Thaar
Couplet: Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall
Explanation: Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 728
9  கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்
பொருள்(விளக்கம்): ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்
Transliteration: Kallaa Thavarin Kataiyenpa KatrarindhumNallaa Ravaiyanju Vaar
Couplet: Who, though they've learned, before the council of the good men quake,
Than men unlearn'd a lower place must take
Explanation: They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 729
10  உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
பொருள்(விளக்கம்): தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்
Transliteration: Ulareninum Illaarotu Oppar KalananjikKatra Selachchollaa Thaar
Couplet: Who what they've learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they
Explanation: Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead
பால் : பொருட்பால், அதிகாரம் : 73 - அவையஞ்சாமை, குறள் : 730
Page 73 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com