
44. குற்றங்கடிதல்
| 1 செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து |
| பொருள்(விளக்கம்): இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும் |
| Transliteration: Serukkunj Chinamum Sirumaiyum IllaarPerukkam Perumidha Neerththu |
| Couplet: Who arrogance, and wrath, and littleness of low desire restrain, To sure increase of lofty dignity attain |
| Explanation: 54 Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 431 |
| 2 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு |
| பொருள்(விளக்கம்): மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும் |
| Transliteration: Ivaralum Maanpirandha Maanamum MaanaaUvakaiyum Edham Iraikku |
| Couplet: A niggard hand, o'erweening self-regard, and mirth Unseemly, bring disgrace to men of kingly brith |
| Explanation: Avarice, undignified pride, and low pleasures are faults in a king |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 432 |
| 3 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் |
| பொருள்(விளக்கம்): பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள் |
| Transliteration: Thinaiththunaiyaang Kutram Varinum PanaiththunaiyaakKolvar Pazhinaanu Vaar |
| Couplet: Though small as millet-seed the fault men deem; As palm tree vast to those who fear disgrace 'twill seem |
| Explanation: Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 433 |
| 4 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை |
| பொருள்(விளக்கம்): குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும் |
| Transliteration: Kutrame Kaakka Porulaakak KutrameAtran Tharooum Pakai |
| Couplet: Freedom from faults is wealth; watch heedfully 'Gainst these, for fault is fatal enmity |
| Explanation: Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 434 |
| 5 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் |
| பொருள்(விளக்கம்): முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும் |
| Transliteration: Varumunnark Kaavaadhaan Vaazhkkai ErimunnarVaiththooru Polak Ketum |
| Couplet: His joy who guards not 'gainst the coming evil day, Like straw before the fire shall swift consume away |
| Explanation: The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 435 |
| 6 தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு |
| பொருள்(விளக்கம்): முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? |
| Transliteration: Thankutram Neekkip Pirarkutrang KaankirpinEnkutra Maakum Iraikku? |
| Couplet: Faultless the king who first his own faults cures, and then Permits himself to scan faults of other men |
| Explanation: What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 436 |
| 7 செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் |
| பொருள்(விளக்கம்): நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும் |
| Transliteration: Seyarpaala Seyyaa Thivariyaan SelvamUyarpaala Thandrik Ketum |
| Couplet: Who leaves undone what should be done, with niggard mind, His wealth shall perish, leaving not a wrack behind |
| Explanation: The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 437 |
| 8 பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று |
| பொருள்(விளக்கம்): எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான் |
| Transliteration: Patrullam Ennum Ivaranmai EtrullumEnnap Patuvadhon Randru |
| Couplet: The greed of soul that avarice men call, When faults are summed, is worst of all |
| Explanation: Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 438 |
| 9 வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை |
| பொருள்(விளக்கம்): எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது |
| Transliteration: Viyavarka Egngnaandrum Thannai NayavarkaNandri Payavaa Vinai |
| Couplet: Never indulge in self-complaisant mood, Nor deed desire that yields no gain of good |
| Explanation: Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 439 |
| 10 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் |
| பொருள்(விளக்கம்): தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும் |
| Transliteration: Kaadhala Kaadhal Ariyaamai UykkirpinEdhila Edhilaar Nool |
| Couplet: If, to your foes unknown, you cherish what you love, Counsels of men who wish you harm will harmless prove |
| Explanation: If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 44 - குற்றங்கடிதல், குறள் : 440 |