srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

61. மடியின்மை

1  குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
பொருள்(விளக்கம்): பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்
Transliteration: 601 Kutiyennum Kundraa Vilakkam MatiyennumMaasoora Maaindhu Ketum
Couplet: Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light
Explanation: By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 601
2  மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
பொருள்(விளக்கம்): குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
Transliteration: Matiyai Matiyaa Ozhukal KutiyaikKutiyaaka Ventu Pavar
Couplet: Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity
Explanation: Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 602
3  மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து
பொருள்(விளக்கம்): அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்
Transliteration: Matimatik Kontozhukum Pedhai PirandhaKutimatiyum Thanninum Mundhu
Couplet: Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself
Explanation: The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 603
4  குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
பொருள்(விளக்கம்): சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்
Transliteration: Kutimatindhu Kutram Perukum MatimatindhuMaanta Ugnatri Lavarkku
Couplet: His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive
Explanation: Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 604
5  நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
பொருள்(விளக்கம்): காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!
Transliteration: Netuneer Maravi Matidhuyil NaankumKetuneeraar Kaamak Kalan
Couplet: Delay, oblivion, sloth, and sleep: these four
Are pleasure-boat to bear the doomed to ruin's shore
Explanation: Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 605
6  படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
பொருள்(விளக்கம்): தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்
Transliteration: Patiyutaiyaar Patramaindhak Kannum MatiyutaiyaarMaanpayan Eydhal Aridhu
Couplet: Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain
Explanation: It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 606
7  இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
பொருள்(விளக்கம்): முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்
Transliteration: Itipurindhu Ellunj Chol Ketpar MatipurindhuMaanta Ugnatri Lavar
Couplet: Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt
Explanation: Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 607
8  மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்
பொருள்(விளக்கம்): பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்
Transliteration: Matimai Kutimaikkan Thangindhan OnnaarkkuAtimai Pukuththi Vitum
Couplet: If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be
Explanation: If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 608
9  குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்
பொருள்(விளக்கம்): தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்
Transliteration: Kutiyaanmai Yulvandha Kutram OruvanMatiyaanmai Maatrak Ketum
Couplet: Who changes slothful habits saves
Himself from all that household rule depraves
Explanation: When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 609
10  மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
பொருள்(விளக்கம்): சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்
Transliteration: Matiyilaa Mannavan Eydhum AtiyalandhaanThaaaya Thellaam Orungu
Couplet: The king whose life from sluggishness is rid,
Shall rule o'er all by foot of mighty god bestrid
Explanation: The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot
பால் : பொருட்பால், அதிகாரம் : 61 - மடியின்மை, குறள் : 610
Page 61 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com