
52. தெரிந்து வினையாடல்
| 1 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் |
| பொருள்(விளக்கம்): எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர் |
| Transliteration: Enaivakaiyaan Theriyak Kannum VinaivakaiyaanVeraakum Maandhar Palar |
| Couplet: Even when tests of every kind are multiplied, Full many a man proves otherwise, by action tried |
| Explanation: Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 511 |
| 2 அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று |
| பொருள்(விளக்கம்): ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது |
| Transliteration: Arindhaatrich Cheykirpaarku Allaal VinaidhaanSirandhaanendru Evarpaar Randru |
| Couplet: No specious fav'rite should the king's commission bear, But he that knows, and work performs with patient care |
| Explanation: (A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 512 |
| 3 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த உணர்ந்து செயல் |
| பொருள்(விளக்கம்): செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும் |
| Transliteration: Seyvaanai Naati Vinainaatik KaalaththotuEydha Unarndhu Seyal |
| Couplet: Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?' Of hour befitting both assured, let every work proceed |
| Explanation: Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 513 |
| 4 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல் |
| பொருள்(விளக்கம்): ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் |
| Transliteration: Ithanai Ithanaal Ivanmutikkum EndraaindhuAdhanai Avankan Vital |
| Couplet: 'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand |
| Explanation: After having considered, 'this man can accomplish this, by these means', let (the king) leave with him the discharge of that duty |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 514 |
| 5 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் |
| பொருள்(விளக்கம்): ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும் |
| Transliteration: Vinaik Kurimai Naatiya Pindrai AvanaiAdharkuriya Naakach Cheyal |
| Couplet: As each man's special aptitude is known, Bid each man make that special work his own |
| Explanation: Having considered what work a man is fit for, let (the king) employ him in that work |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 515 |
| 6 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு |
| பொருள்(விளக்கம்): எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும் |
| Transliteration: Vinaikkan Vinaiyutaiyaan Kenmaive RaakaNinaippaanai Neengum Thiru |
| Couplet: Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who share |
| Explanation: Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 516 |
| 7 நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு |
| பொருள்(விளக்கம்): உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும் |
| Transliteration: 520 Naatorum Naatuka Mannan VinaiseyvaanKotaamai Kotaa Thulaku |
| Couplet: Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way |
| Explanation: Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 517 |
| 8 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் |
| பொருள்(விளக்கம்): நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள் |
| Transliteration: Nanmaiyum Theemaiyum Naati NalampurindhaThanmaiyaan Aalap Patum |
| Couplet: Who good and evil scanning, ever makes the good his joy; Such man of virtuous mood should king employ |
| Explanation: He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 518 |
| 9 வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை |
| பொருள்(விளக்கம்): வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன் |
| Transliteration: Vaari Perukki Valampatuththu UtravaiAaraaivaan Seyka Vinai |
| Couplet: Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's hand |
| Explanation: Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 519 |
| 10 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு |
| பொருள்(விளக்கம்): அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம் |
| Transliteration: Anparivu Thetram Avaavinmai InnaankumNankutaiyaan Katte Thelivu |
| Couplet: A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted be |
| Explanation: Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 52 - தெரிந்து வினையாடல், குறள் : 520 |