
26. புலால் மறுத்தல்
| 1 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன் உடல்சுவை யுண்டார் மனம் |
| பொருள்(விளக்கம்): படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல |
| Transliteration: Pataikontaar Nenjampol Nannookkaadhu OndranUtalsuvai Untaar Manam |
| Couplet: Like heart of them that murderous weapons bear, his mind, Who eats of savoury meat, no joy in good can find |
| Explanation: Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 251 |
| 2 அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல் |
| பொருள்(விளக்கம்): கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது |
| Transliteration: Arulalladhu Yaadhenin Kollaamai KoralPorulalladhu Avvoon Thinal |
| Couplet: 'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill'; To eat dead flesh can never worthy end fulfil |
| Explanation: If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life) |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 252 |
| 3 உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு |
| பொருள்(விளக்கம்): உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன |
| Transliteration: Unnaamai Ulladhu Uyirnilai OonunnaAnnaaththal Seyyaadhu Alaru |
| Couplet: If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not again |
| Explanation: Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in) |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 253 |
| 4 தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில் |
| பொருள்(விளக்கம்): புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார் |
| Transliteration: Thinarporuttaal Kollaadhu Ulakenin YaarumVilaipporuttaal Oondraruvaa Ril |
| Couplet: 'We eat the slain,' you say, by us no living creatures die; Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy |
| Explanation: If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 254 |
| 5 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின் |
| பொருள்(விளக்கம்): புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும் |
| Transliteration: Unnaamai Ventum Pulaaal PiridhondranPunnadhu Unarvaarp Perin |
| Couplet: With other beings' ulcerous wounds their hunger they appease; If this they felt, desire to eat must surely cease |
| Explanation: If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 255 |
| 6 செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன் |
| பொருள்(விளக்கம்): மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள் |
| Transliteration: Seyirin Thalaippirindha Kaatchiyaar UnnaarUyirin Thalaippirindha Oon |
| Couplet: Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave |
| Explanation: The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 256 |
| 7 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று |
| பொருள்(விளக்கம்): நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது |
| Transliteration: Avisorin Thaayiram Vettalin OndranUyirsekuth Thunnaamai Nandru |
| Couplet: Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share |
| Explanation: Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc, in a thousand sacrifices |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 257 |
| 8 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் |
| பொருள்(விளக்கம்): புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும் |
| Transliteration: Kollaan Pulaalai Maruththaanaik KaikooppiEllaa Uyirun Thozhum |
| Couplet: Who slays nought,- flesh rejects- his feet before All living things with clasped hands adore |
| Explanation: All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 258 |
| 9 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் |
| பொருள்(விளக்கம்): தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும் |
| Transliteration: Thannoon Perukkarkuth Thaanpiridhu OonunpaanEngnganam Aalum Arul? |
| Couplet: How can the wont of 'kindly grace' to him be known, Who other creatures' flesh consumes to feed his own |
| Explanation: How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 259 |
| 10 பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு |
| பொருள்(விளக்கம்): பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை |
| Transliteration: Porulaatchi Potraadhaarkku Illai ArulaatchiAangillai Oondhin Pavarkku |
| Couplet: No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger sate |
| Explanation: As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 26 - புலால் மறுத்தல், குறள் : 260 |