
81. பழமை
| 1 பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு |
| பொருள்(விளக்கம்): பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான் |
| Transliteration: Pazhaimai Enappatuvadhu Yaadhenin YaadhumKizhamaiyaik Keezhndhitaa Natpu |
| Couplet: Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar act |
| Explanation: Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 801 |
| 2 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன் |
| பொருள்(விளக்கம்): பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும் |
| Transliteration: Natpir Kuruppuk Kezhudhakaimai MatradharkuUppaadhal Saandror Katan |
| Couplet: Familiar freedom friendship's very frame supplies; To be its savour sweet is duty of the wise |
| Explanation: The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 802 |
| 3 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை |
| பொருள்(விளக்கம்): பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும் |
| Transliteration: Pazhakiya Natpevan Seyyung KezhudhakaimaiSeydhaangu Amaiyaak Katai |
| Couplet: When to familiar acts men kind response refuse, What fruit from ancient friendship's use |
| Explanation: Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 803 |
| 4 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின் |
| பொருள்(விளக்கம்): பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார் |
| Transliteration: Vizhaidhakaiyaan Venti Iruppar KezhudhakaiyaarKelaadhu Nattaar Seyin |
| Couplet: When friends unbidden do familiar acts with loving heart, Friends take the kindly deed in friendly part |
| Explanation: If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 804 |
| 5 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் |
| பொருள்(விளக்கம்): வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் |
| Transliteration: Pedhaimai Ondro Perungizhamai EndrunarkaNodhakka Nattaar Seyin |
| Couplet: Not folly merely, but familiar carelessness, Esteem it, when your friends cause you distress |
| Explanation: If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 805 |
| 6 எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு |
| பொருள்(விளக்கம்): நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள் |
| Transliteration: Ellaikkan Nindraar Thuravaar TholaivitaththumThollaikkan Nindraar Thotarpu |
| Couplet: Who stand within the bounds quit not, though loss impends, Association with the old familiar friends |
| Explanation: Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 806 |
| 7 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர் |
| பொருள்(விளக்கம்): தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார் |
| Transliteration: Azhivandha Seyyinum Anparaar AnpinVazhivandha Kenmai Yavar |
| Couplet: True friends, well versed in loving ways, Cease not to love, when friend their love betrays |
| Explanation: Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 807 |
| 8 கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின் |
| பொருள்(விளக்கம்): நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும் |
| Transliteration: Kelizhukkam Kelaak Kezhudhakaimai VallaarkkuNaalizhukkam Nattaar Seyin |
| Couplet: In strength of friendship rare of friend's disgrace who will not hear, The day his friend offends will day of grace to him appear |
| Explanation: To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 808 |
| 9 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு |
| பொருள்(விளக்கம்): தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும் |
| Transliteration: Ketaaa Vazhivandha Kenmaiyaar KenmaiVitaaar Vizhaiyum Ulaku |
| Couplet: Friendship of old and faithful friends, Who ne'er forsake, the world commends |
| Explanation: They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 809 |
| 10 விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் |
| பொருள்(விளக்கம்): பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள் |
| Transliteration: Vizhaiyaar Vizhaiyap Patupa PazhaiyaarkanPanpin Thalaippiriyaa Thaar |
| Couplet: Ill-wishers even wish them well, who guard For ancient friends, their wonted kind regard |
| Explanation: Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 81 - பழமை, குறள் : 810 |