srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

97. மானம்

1  குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
பொருள்(விளக்கம்): குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்
Transliteration: Kundrin Anaiyaarum Kundruvar KundruvaKundri Anaiya Seyin
Couplet: If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought
Explanation: Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 961
2  புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை
பொருள்(விளக்கம்): இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?
Transliteration: Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal EnmatruIkazhvaarpin Sendru Nilai
Couplet: It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait
Explanation: Why follow men who scorn, and at their bidding wait?
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 962
3  ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
பொருள்(விளக்கம்): தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்
Transliteration: Ottaarpin Sendroruvan Vaazhdhala�n AnnilaiyeKettaan Enappatudhal Nandru
Couplet: Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train
Explanation: It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 963
4  மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து
பொருள்(விளக்கம்): சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்
Transliteration: Marundhomatru Oonompum Vaazhkkai PerundhakaimaiPeetazhiya Vandha Itaththu
Couplet: When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet
Explanation: For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 964
5  மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
பொருள்(விளக்கம்): உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்
Transliteration: Mayirneeppin Vaazhaak Kavarimaa AnnaarUyirneeppar Maanam Varin
Couplet: Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day
Explanation: Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 965
6  இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு
பொருள்(விளக்கம்): மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்
Transliteration: Ilivarin Vaazhaadha Maanam UtaiyaarOlidhozhudhu Eththum Ulaku
Couplet: Who, when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye
Explanation: The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 966
7  இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
பொருள்(விளக்கம்): கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்
Transliteration: Indri Amaiyaach Chirappina AayinumKundra Varupa Vital
Couplet: Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain
Explanation: Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 967
8  சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
பொருள்(விளக்கம்): புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்
Transliteration: Seerinum Seeralla Seyyaare SeerotuPeraanmai Ventu Pavar
Couplet: Who seek with glory to combine honour's untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory's name
Explanation: Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 968
9  பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
பொருள்(விளக்கம்): உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்
Transliteration: Perukkaththu Ventum Panidhal SiriyaSurukkaththu Ventum Uyarvu
Couplet: Bow down thy soul, with increase blest, in happy hour;
Lift up thy heart, when stript of all by fortune's power
Explanation: In great prosperity humility is becoming; dignity, in great adversity
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 969
10  தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
பொருள்(விளக்கம்): மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்
Transliteration: Thalaiyin Izhindha Mayiranaiyar MaandharNilaiyin Izhindhak Katai
Couplet: Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth
Explanation: They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head
பால் : பொருட்பால், அதிகாரம் : 97 - மானம், குறள் : 970
Page 97 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com