srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

82. தீ நட்பு

1  ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
பொருள்(விளக்கம்): நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்
Transliteration: Ollum Karumam Utatru PavarkenmaiSollaataar Sora Vital
Couplet: Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew
Explanation: Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 811
2  கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
பொருள்(விளக்கம்): சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்
Transliteration: Kanavinum Innaadhu Manno VinaiveruSolveru Pattaar Thotarpu
Couplet: E'en in a dream the intercourse is bitterness
With men whose deeds are other than their words profess
Explanation: The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 812
3  எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
பொருள்(விளக்கம்): தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்
Transliteration: Enaiththum Kurukudhal Ompal ManaikkezheeiMandril Pazhippaar Thotarpu
Couplet: In anywise maintain not intercourse with those,
Who in the house are friends, in hall are slandering foes
Explanation: Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 813
4  பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
பொருள்(விளக்கம்): நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது
Transliteration: Parukuvaar Polinum Panpilaar KenmaiPerukalir Kundral Inidhu
Couplet: Though evil men should all-absorbing friendship show,
Their love had better die away than grow
Explanation: The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 814
5  உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
பொருள்(விளக்கம்): தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?
Transliteration: Urinnattu Arinoruum Oppilaar KenmaiPerinum Izhappinum En?
Couplet: What though you gain or lose friendship of men of alien heart,
Who when you thrive are friends, and when you fail depart
Explanation: Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 815
6  உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
பொருள்(விளக்கம்): பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்
Transliteration: Uruvadhu Seerdhookkum Natpum PeruvadhuKolvaarum Kalvarum Ner
Couplet: These are alike: the friends who ponder friendship's gain
Those who accept whate'er you give, and all the plundering train
Explanation: Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 816
7  அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
பொருள்(விளக்கம்): போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்
Transliteration: Amarakaththu Aatrarukkum Kallaamaa AnnaarThamarin Thanimai Thalai
Couplet: A steed untrained will leave you in the tug of war;
Than friends like that to dwell alone is better far
Explanation: Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 817
8  செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
பொருள்(விளக்கம்): கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்
Transliteration: Seydhemanj Chaaraach Chiriyavar PunkenmaiEydhalin Eydhaamai Nandru
Couplet: 'Tis better not to gain than gain the friendship profitless
Of men of little minds, who succour fails when dangers press
Explanation: It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 818
9  பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
பொருள்(விளக்கம்): அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்
Transliteration: Pedhai Perungezheei Natpin ArivutaiyaarEdhinmai Koti Urum
Couplet: Better ten million times incur the wise man's hate,
Than form with foolish men a friendship intimate
Explanation: The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 819
10  நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
பொருள்(விளக்கம்): சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்
Transliteration: Nakaivakaiya Raakiya Natpin PakaivaraalPaththatuththa Koti Urum
Couplet: From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that's formed with laughers vain
Explanation: What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter
பால் : பொருட்பால், அதிகாரம் : 82 - தீ நட்பு, குறள் : 820
Page 82 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com