
39. இறைமாட்சி
| 1 படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு |
| பொருள்(விளக்கம்): ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும் |
| Transliteration: Pataikuti Koozhamaichchu Natparan AarumUtaiyaan Arasarul Eru |
| Couplet: An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings |
| Explanation: He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 381 |
| 2 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு |
| பொருள்(விளக்கம்): துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும் |
| Transliteration: Anjaamai Eekai Arivookkam InnaankumEnjaamai Vendhark Kiyalpu |
| Couplet: Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermore |
| Explanation: Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 382 |
| 3 தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு |
| பொருள்(விளக்கம்): காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும் |
| Transliteration: 383 Thoongaamai Kalvi Thunivutaimai ImmoondrumNeengaa Nilanaan Pavarkku |
| Couplet: A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belong |
| Explanation: These three things, viz, vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 383 |
| 4 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு |
| பொருள்(விளக்கம்): அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள் |
| Transliteration: Aranizhukkaa Thallavai Neekki MaranizhukkaaMaanam Utaiya Tharasu |
| Couplet: Kingship, in virtue failing not, all vice restrains, In courage failing not, it honour's grace maintains |
| Explanation: He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 384 |
| 5 இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு |
| பொருள்(விளக்கம்): முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் |
| Transliteration: Iyatralum Eettalung Kaaththalum KaaththaVakuththalum Valla Tharasu |
| Couplet: A king is he who treasure gains, stores up, defends, And duly for his kingdom's weal expends |
| Explanation: He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 385 |
| 6 காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் |
| பொருள்(விளக்கம்): காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் |
| Transliteration: Kaatchik Keliyan Katunjollan AllanelMeekkoorum Mannan Nilam |
| Couplet: Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swells |
| Explanation: The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 386 |
| 7 இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு |
| பொருள்(விளக்கம்): வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும் |
| Transliteration: Insolaal Eeththalikka Vallaarkkuth ThansolaalThaankan Tanaiththiv Vulaku |
| Couplet: With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his command |
| Explanation: The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 387 |
| 8 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும் |
| பொருள்(விளக்கம்): நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான் |
| Transliteration: Muraiseydhu Kaappaatrum Mannavan MakkatkuIraiyendru Vaikkap Patum |
| Couplet: Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people reigns |
| Explanation: That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects). |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 388 |
| 9 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு |
| பொருள்(விளக்கம்): காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும் |
| Transliteration: Sevikaippach Chorporukkum Panputai VendhanKavikaikkeezhth Thangum Ulaku |
| Couplet: The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure |
| Explanation: The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 389 |
| 10 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி |
| பொருள்(விளக்கம்): நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் |
| Transliteration: Kotaiyali Sengol Kutiyompal NaankumUtaiyaanaam Vendhark Koli |
| Couplet: Gifts, grace, right sceptre, care of people's weal; These four a light of dreaded kings reveal |
| Explanation: He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 39 - இறைமாட்சி, குறள் : 390 |