
16. பொறாமையுடைமை
| 1 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை |
| பொருள்(விளக்கம்): தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் |
| Transliteration: Akazhvaaraith Thaangum Nilampolath ThammaiIkazhvaarp Poruththal Thalai |
| Couplet: As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best |
| Explanation: To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 151 |
| 2 பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று |
| பொருள்(விளக்கம்): அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும் |
| Transliteration: Poruththal Irappinai Endrum AdhanaiMaraththal Adhaninum Nandru |
| Couplet: Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise; |
| Explanation: Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 152 |
| 3 இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை |
| பொருள்(விளக்கம்): வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது |
| Transliteration: Inmaiyul Inmai Virundhoraal VanmaiyulVanmai Matavaarp Porai |
| Couplet: The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart |
| Explanation: To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 153 |
| 4 நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும் |
| பொருள்(விளக்கம்): பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும் |
| Transliteration: Niraiyutaimai Neengaamai Ventin PoraiyutaimaiPotri Yozhukap Patum |
| Couplet: Seek'st thou honour never tarnished to retain; So must thou patience, guarding evermore, maintain |
| Explanation: If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 154 |
| 5 ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து |
| பொருள்(விளக்கம்): தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள் |
| Transliteration: Oruththaarai Ondraaka Vaiyaare VaipparPoruththaaraip Ponpor Podhindhu |
| Couplet: Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized |
| Explanation: (The wise) will not at all esteem the resentful They will esteem the patient just as the gold which they lay up with care |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 155 |
| 6 ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் |
| பொருள்(விளக்கம்): தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும் |
| Transliteration: Oruththaarkku Orunaalai Inpam PoruththaarkkupPondrun Thunaiyum Pukazh |
| Couplet: Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass away |
| Explanation: The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the world |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 156 |
| 7 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று |
| பொருள்(விளக்கம்): பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும் |
| Transliteration: Thiranalla Tharpirar Seyyinum NonondhuAranalla Seyyaamai Nandru |
| Couplet: Though others work thee ill, thus shalt thou blessing reap; Grieve for their sin, thyself from vicious action keep |
| Explanation: Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 157 |
| 8 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல் |
| பொருள்(விளக்கம்): ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம் |
| Transliteration: Mikudhiyaan Mikkavai Seydhaaraith ThaandhamThakudhiyaan Vendru Vital |
| Couplet: With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail |
| Explanation: Let a man by patience overcome those who through pride commit excesses |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 158 |
| 9 துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர் |
| பொருள்(விளக்கம்): எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள் |
| Transliteration: Thurandhaarin Thooimai Utaiyar IrandhaarvaaiInnaachchol Norkir Pavar |
| Couplet: They who transgressors' evil words endure With patience, are as stern ascetics pure |
| Explanation: Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 159 |
| 10 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொ னோற்பாரிற் பின் |
| பொருள்(விளக்கம்): பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள் |
| Transliteration: Unnaadhu Norpaar Periyar PirarsollumInnaachchol Norpaarin Pin |
| Couplet: Though 'great' we deem the men that fast and suffer pain, Who others' bitter words endure, the foremost place obtain |
| Explanation: Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 16 - பொறாமையுடைமை, குறள் : 160 |