srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

49. காலமறிதல்

1  பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
பொருள்(விளக்கம்): பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
Transliteration: Pakalvellum Kookaiyaik Kaakkai IkalvellumVendharkku Ventum Pozhudhu
Couplet: A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight
Explanation: A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 481
2  பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
பொருள்(விளக்கம்): காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்
Transliteration: Paruvaththotu Otta Ozhukal ThiruvinaithTheeraamai Aarkkung Kayiru
Couplet: The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid
Explanation: Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king)
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 482
3  அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்
பொருள்(விளக்கம்): தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை
Transliteration: Aruvinai Yenpa Ulavo KaruviyaanKaalam Arindhu Seyin
Couplet: Can any work be hard in very fact,
If men use fitting means in timely act
Explanation: Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 483
4  ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
பொருள்(விளக்கம்): உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்
Transliteration: Gnaalam Karudhinung Kaikootung KaalamKarudhi Itaththaar Seyin
Couplet: The pendant world's dominion may be won,
In fitting time and place by action done
Explanation: Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 484
5  காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்
பொருள்(விளக்கம்): கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்
Transliteration: Kaalam Karudhi Iruppar KalangaadhuGnaalam Karudhu Pavar
Couplet: Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait
Explanation: They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 485
6  ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து
பொருள்(விளக்கம்): கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்
Transliteration: Ookka Mutaiyaan Otukkam PorudhakarThaakkarkup Perun Thakaiththu
Couplet: The men of mighty power their hidden energies repress,
As fighting ram recoils to rush on foe with heavier stress
Explanation: The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 486
7  பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
பொருள்(விளக்கம்): பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்
Transliteration: Pollena Aange Puramveraar KaalampaarththuUlverppar Olli Yavar
Couplet: The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow
Explanation: The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 487
8  செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை
பொருள்(விளக்கம்): பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்
Transliteration: Serunaraik Kaanin Sumakka IruvaraiKaanin Kizhakkaam Thalai
Couplet: If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there
Explanation: If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 488
9  எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
பொருள்(விளக்கம்): கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்
Transliteration: Eydhar Kariyadhu Iyaindhakkaal AnnilaiyeSeydhar Kariya Seyal
Couplet: When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done
Explanation: If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity)
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 489
10  கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
பொருள்(விளக்கம்): காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்
Transliteration: Kokkokka Koompum Paruvaththu MatradhanKuththokka Seerththa Itaththu
Couplet: As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power
Explanation: At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity
பால் : பொருட்பால், அதிகாரம் : 49 - காலமறிதல், குறள் : 490
Page 49 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com