srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

84. பேதைமை

1  பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
பொருள்(விளக்கம்): கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்
Transliteration: Pedhaimai Enpadhondru Yaadhenin EdhangontuOodhiyam Poka Vital
Couplet: What one thing merits folly's special name.
Letting gain go, loss for one's own to claim
Explanation: Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 831
2  பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்
பொருள்(விளக்கம்): தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்
Transliteration: Pedhaimaiyul Ellaam Pedhaimai KaadhanmaiKaiyalla Thankat Seyal
Couplet: 'Mid follies chiefest folly is to fix your love
On deeds which to your station unbefitting prove
Explanation: The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 832
3  நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
பொருள்(விளக்கம்): வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்
Transliteration: Naanaamai Naataamai Naarinmai YaadhondrumPenaamai Pedhai Thozhil
Couplet: Ashamed of nothing, searching nothing out, of loveless heart,
Nought cherishing, 'tis thus the fool will play his part
Explanation: Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 833
4  ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்
பொருள்(விளக்கம்): படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது
Transliteration: Odhi Unarndhum Pirarkkuraiththum ThaanatangaapPedhaiyin Pedhaiyaar Il
Couplet: The sacred law he reads and learns, to other men expounds,-
Himself obeys not; where can greater fool be found
Explanation: There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 834
5  ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
பொருள்(விளக்கம்): தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்
Transliteration: Orumaich Cheyalaatrum Pedhai EzhumaiyumThaanpuk Kazhundhum Alaru
Couplet: The fool will merit hell in one brief life on earth,
In which he entering sinks through sevenfold round of birth
Explanation: A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 835
6  பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
பொருள்(விளக்கம்): நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்
Transliteration: Poipatum Ondro Punaipoonum KaiyariyaapPedhai Vinaimer Kolin
Couplet: When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains
Explanation: If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail (But) is it all ? He will even adorn himself with fetters
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 836
7  ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
பொருள்(விளக்கம்): அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது
Transliteration: Edhilaar Aarath Thamarpasippar PedhaiPerunjelvam Utrak Katai
Couplet: When fools are blessed with fortune's bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore
Explanation: If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 837
8  மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்
பொருள்(விளக்கம்): நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்
Transliteration: Maiyal Oruvan Kaliththatraal PedhaidhanKaiyondru Utaimai Perin
Couplet: When folly's hand grasps wealth's increase, 'twill be
As when a mad man raves in drunken glee
Explanation: A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 838
9  பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
பொருள்(விளக்கம்): அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை
Transliteration: Peridhinidhu Pedhaiyaar Kenmai PirivinkanPeezhai Tharuvadhon Ril
Couplet: Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting
Explanation: The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 839
10  கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
பொருள்(விளக்கம்): அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது
Transliteration: Kazhaaakkaal Palliyul Vaiththatraal SaandrorKuzhaaaththup Pedhai Pukal
Couplet: Like him who seeks his couch with unwashed feet,
Is fool whose foot intrudes where wise men meet
Explanation: The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed
பால் : பொருட்பால், அதிகாரம் : 84 - பேதைமை, குறள் : 840
Page 84 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com