srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

102. நாணுடைமை

1  கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
பொருள்(விளக்கம்): ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு
Transliteration: Karumaththaal Naanudhal Naanun ThirunudhalNallavar Naanup Pira
Couplet: To shrink abashed from evil deed is 'generous shame';
Other is that of bright-browed one of virtuous fame
Explanation: True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1011
2  ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
பொருள்(விளக்கம்): உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்
Transliteration: Oonutai Echcham Uyirkkellaam VerallaNaanutaimai Maandhar Sirappu
Couplet: Food, clothing, and other things alike all beings own;
By sense of shame the excellence of men is known
Explanation: Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1012
3  ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு
பொருள்(விளக்கம்): உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்
Transliteration: Oonaik Kuriththa Uyirellaam NaanennumNanmai Kuriththadhu Saalpu
Couplet: All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame
Explanation: As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1013
4  அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை
பொருள்(விளக்கம்): நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்
Transliteration: Aniandro Naanutaimai Saandrorkku AqdhindrelPiniandro Peetu Natai
Couplet: And is not shame an ornament to men of dignity?
Without it step of stately pride is piteous thing to see
Explanation: Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others)
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1014
5  பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு
பொருள்(விளக்கம்): தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்
Transliteration: Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar NaanukkuUraipadhi Ennum Ulaku
Couplet: As home of virtuous shame by all the world the men are known,
Who feel ashamed for others, guilt as for their own
Explanation: The world regards as the abode of modesty him who fear his own and other's guilt
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1015
6  நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
பொருள்(விளக்கம்): பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்
Transliteration: Naanveli Kollaadhu Manno ViyangnaalamPenalar Melaa Yavar
Couplet: Unless the hedge of shame inviolate remain,
For men of lofty soul the earth's vast realms no charms retain
Explanation: The great make modesty their barrier (of defence) and not the wide world
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1016
7  நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்
பொருள்(விளக்கம்): நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்
Transliteration: Naanaal Uyiraith Thurappar UyirpporuttaalNaandhuravaar Naanaal Pavar
Couplet: The men of modest soul for shame would life an offering make,
But ne'er abandon virtuous shame for life's dear sake
Explanation: The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1017
8  பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து
பொருள்(விளக்கம்): வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்
Transliteration: Pirarnaanath Thakkadhu Thaannaanaa NaayinAramnaanath Thakkadhu Utaiththu
Couplet: Though know'st no shame, while all around asha med must be:
Virtue will shrink away ashamed of thee
Explanation: Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1018
9  குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
பொருள்(விளக்கம்): கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்
Transliteration: Kulanjutum Kolkai Pizhaippin NalanjutumNaaninmai Nindrak Katai
Couplet: 'Twill race consume if right observance fail;
'Twill every good consume if shamelessness prevail
Explanation: Want of manners injures one's family; but want of modesty injures one's character
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1019
10  நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று
பொருள்(விளக்கம்): உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை
Transliteration: Naanakath Thillaar Iyakkam MarappaavaiNaanaal Uyirmarutti Atru
Couplet: 'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men
Explanation: The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string
பால் : பொருட்பால், அதிகாரம் : 102 - நாணுடைமை, குறள் : 1020
Page 102 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com