srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

132. புலவி நுணுக்கம்

1  பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
பொருள்(விளக்கம்): பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்
Transliteration: Penniyalaar Ellaarum Kannin PodhuunparNannen Paraththanin Maarpu
Couplet: From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace
Explanation: You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way I will not embrace you
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1311
2  ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து
பொருள்(விளக்கம்): ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து
Transliteration: Ooti Irundhemaath Thumminaar YaamdhammaiNeetuvaazh Kenpaak Karindhu
Couplet: One day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'
Explanation: When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1312
3  கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று
பொருள்(விளக்கம்): கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்
Transliteration: Kottup Pooch Chootinum Kaayum OruththiyaikKaattiya Sootineer Endru
Couplet: I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'
Explanation: Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1313
4  யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று
பொருள்(விளக்கம்): ``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்
Transliteration: Yaarinum Kaadhalam Endrenaa OotinaalYaarinum Yaarinum Endru
Couplet: 'I love you more than all beside,' 'T was thus I gently spoke;
'What all, what all?' she instant cried; And all her anger woke
Explanation: When I said I loved her more than any other woman, she said 'more than others, yes, more than others,' and remained sulky
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1314
5  இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்
பொருள்(விளக்கம்): ``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி
Transliteration: Immaip Pirappil Piriyalam EndrenaakKannirai Neerkon Tanal
Couplet: 'While here I live, I leave you not,' I said to calm her fears
She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears
Explanation: When I said I would never part from her in this life her eyes were filled with tears
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1315
6  உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
பொருள்(விளக்கம்): ``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள்
Transliteration: Ullinen Endrenmar Renmarandheer EndrennaipPullaal Pulaththak Kanal
Couplet: 'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'
She cried, and then her opened arms, Forthwith embraced me not
Explanation: When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1316
7  வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
பொருள்(விளக்கம்): தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்
Transliteration: Vazhuththinaal Thumminen Aaka AzhiththazhudhaalYaarullith Thummineer Endru
Couplet: She hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'
Explanation: When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, 'At the thought of whom did you sneeze?'
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1317
8  தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
பொருள்(விளக்கம்): ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள்
Transliteration: Thummuch Cheruppa Azhudhaal NumarullalEmmai Maraiththiro Endru
Couplet: And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), 'Your thoughts from me you hide'
Explanation: When I suppressed my sneezing, she wept saying, 'I suppose you (did so) to hide from me your own people's remembrance of you'
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1318
9  தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று
பொருள்(விளக்கம்): நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள்
Transliteration: Thannai Unarththinum Kaayum PirarkkumneerInneerar Aakudhir Endru
Couplet: I then began to soothe and coax, To calm her jealous mind;
'I see', quoth she, 'to other folks How you are wondrous kind
Explanation: 'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' Even when I try to remove her dislike, she is displeased and says, 'This is the way you behave
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1319
10  நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று
பொருள்(விளக்கம்): ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்
Transliteration: Ninaiththirundhu Nokkinum Kaayum AnaiththuneerYaarulli Nokkineer Endru
Couplet: I silent sat, but thought the more, And gazed on her Then she
Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'
Explanation: Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, 'With whose thought have you (thus) looked on my person?'
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 132 - புலவி நுணுக்கம், குறள் : 1320
Page 132 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com